மலையில் இருந்து பள்ளத்தில் பாய்ந்த பேருந்து.... 42 பேர் பலி!
தென்ஆப்பிரிக்காவில், ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா நோக்கி செல்லும் ஒரு பேருந்து மலையில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து என்1 நெடுஞ்சாலையில், லூயிஸ் டிரைகார்ட் நகரத்துக்குக் கிட்டும் மலைப்பாங்கு பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் உருண்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாட்டைச் சேர்ந்த பயணிகள் அடங்கியுள்ளனர். பேருந்து தலைகுப்புற பகுதி கவிழ்ந்ததால், பயணிகள் மீதான தாக்கம் மிகுந்தது. பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவசர மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையை போலீசார் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!