பேருந்து கதவில் சிக்கி 7 வயது சிறுவன் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்! 

 

 

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுத்துமிடத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் பேருந்து கதவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். அங்குள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்தின் கதவை திறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்து கதவில் மாட்டிக்கொண்டது. உயிருக்குப் போராடிய சிறுவனை அவனது உறவினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

VIDEO | Gujarat: A seven-year-old boy died after getting trapped in the hydraulic door of a stationary bus in Vadodara district.

(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/5iIarohz5H

— Press Trust of India (@PTI_News) August 20, 2026

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி மற்றும் பதறவைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவன வளாகத்திற்குள் அமைந்துள்ள குடியிருப்பில் வசித்து வந்த கூலித் தொழிலாளியின் மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.