undefined

ரியல் எஸ்டேட் தகராறில் தொழிலதிபர் கொலை ...  தந்தையும் காயம்!

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (41), பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததோடு, தனது உறவினரான ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமாருடன் சேர்ந்து நிலம் தொடர்பான தொழிலும் செய்து வந்தார். சமீபத்தில் நிலம் வாங்கி வீட்டுமனையாக பிரிப்பது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

தீபாவளி கொண்டாட்டத்திற்காக ஊருக்கு வந்த ஈஸ்வரமூர்த்தி, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு செல்ல ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவருடன் தந்தை கிருஷ்ணமூர்த்தி பின்புறம் அமர்ந்து சென்றார். அவர்கள் வந்த ஸ்கூட்டர், வள்ளியரச்சல் சாலை பிரிவை அடைந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. இதனால் இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது காரை ஓட்டி வந்த ராஜ்குமார், “நீ இன்னும் சாகலையா?” என்று கூறி இரும்புக்கம்பியால் ஈஸ்வரமூர்த்தியை தாக்கியதோடு, பின்னர் காரை முன்னும் பின்னுமாக ஏற்றி அவரை நசுக்கி கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு தப்பி ஓடிய ராஜ்குமாரை வெள்ளகோவில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!