தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை அறிவிப்பு!

 

சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில், மதுபோதையில் அதிவேகமாக ஆடம்பர காரை ஓட்டிச் சென்ற ஷாஜி புருஷோத்தமன், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார். இந்தக் கொடூர விபத்தில் முனிராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த நீண்டகால வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி எனச் கடந்த மாதம் நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனை விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.