மேலும் 7 சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக தொழிலபதிபர் வீரமணி பகீர் வாக்குமூலம்!

 

உறவினர் வீட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணியை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அவர் மேலும் பல சிறுமிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளதாக அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் வீட்டில் வைத்து சிறுமி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட வீரமணியை 3 நாட்கள் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது, தான் ஏற்கனவே செய்த குற்றத்தைத் தவிர மேலும் 7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திடுக்கிடும் தகவலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகள் யார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.