தமிழக அரசியலில் சலசலப்பு... கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா இடமாற்றம்! 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கும், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கும் இடையேயான விவகாரம் மற்றும் அதுதொடர்பான நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், முகாம் இல்லத்திற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவின.

தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் நடந்துள்ள ஊழல்களைத் தான் வெளிக்கொண்டு வந்ததால், தமக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இது குறித்து எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மாநில அளவில் மட்டுமின்றி மத்திய அரசின் கவனத்திற்கும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிற.

தற்போதைய சூழலில், இவ்வழக்கு மற்றும் நிர்வாக ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்பதால் அரசியல் வட்டதியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.