அமலுக்கு வந்தது... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி... கனடாவில் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சேமிப்பு நிதி வரம்பு உயர்வு!

 

கனடாவில் உயர்கல்வி பயிலச் செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான குறைந்தபட்ச சேமிப்பு நிதி வரம்பை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம், முதலாண்டு வாழ்க்கைச் செலவாக தனிநபர் மாணவர் 23,448 கனடிய டாலர் (சுமார் ரூ.34,000 கூடுதல்) தங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.

மாணவர்கள் தங்களது பகுதிநேர வேலையை மட்டுமே முழுமையாக நம்பியிராமல், தங்களின் படிப்பை எத்தகைய சிரமமுமின்றி வெற்றிகரமாக நிறைவு செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.