பிரசாரம் ஓய்ந்தது - நாளை புதுவை உட்பட3 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. 2,140 வேட்பாளர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் மக்கள்!
களத்தில் 2,140 வேட்பாளர்கள் உள்ளனர். தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. நாளை ஏப்ரல் 9ம் தேதி இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 296 எம்.எல்.ஏ பதவிகளுக்கு 2,140 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
| மாநிலம் |
வேட்பாளர்கள் எண்ணிக்கை |
சட்டமன்றத் தொகுதிகள் |
| கேரளா |
985 பேர் |
140 தொகுதிகள் |
| புதுச்சேரி |
366 பேர் |
30 தொகுதிகள் |
| அசாம் |
789 பேர் |
126 தொகுதிகள் |
நேற்று மாலை வரை அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக-வும், அதனைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன.
மாலை 5 மணிக்குப் பிறகு அந்தந்தத் தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வெளியேறத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று ஒருநாள் மட்டும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று அமைதியான முறையில் வாக்குச் சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.