கனடா லாட்டரியில் கேரளப் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.30 கோடி பரிசுத் தொகையை வென்று அசத்தல்!

 

 

கனடாவின் எட்மண்டன் நகரில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த சினேகா ஜாய்க்கு லாட்டரி மூலம் சுமார் ரூ.30 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. அங்கு நடைபெற்ற LOTTO 6/49 கிளாசிக் குலுக்கலில் 6 எண்களும் சரியாகப் பொருந்தியதால், 5 மில்லியன் கனடிய டாலர் பரிசை அவர் வென்றுள்ளார்.

allowfullscreen

இந்த எதிர்பாராத வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் அடைந்துள்ள சினேகா ஜாய், கிடைத்த பணத்தை முதலில் தனது வீட்டுக் கடனை முழுமையாக அடைக்கப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிதிச்சுமையிலிருந்து விடுபட்ட பிறகு, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், பரிசுத் தொகையைத் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இந்த அதிர்ஷ்ட வெற்றி தனது நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.