பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டணி அமைக்கும் கனடா!

 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கடுமையான வர்த்தகக் கெடுபிடிகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பிரத்தியேக உத்திசார் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாகக் கனடா தீவிரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா முழுமையாக இணைந்துகொள்ளப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளில் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய உத்திசார் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் விதமாக, அடுத்த வாரம் கனடா பிரதமர் மார்க் கார்னி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.