10வது முடித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு; ஜூலை 31 கடைசி தேதி!
10வது முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு. வாய்ப்புகள் எப்போதும் வந்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. இந்த முறை தவறாமல் முயற்சித்துப் பாருங்க. 10வது முதல் டிகிரி வரையில் படித்தவர்களுக்கு அசத்தலான வேலைவாய்ப்பு. தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பணியின் தன்மைக்கு ஏற்ப ரூ.30,000 வரை மாதாந்திரச் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முதலில் சுருக்கப் பட்டியல் தயாரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான எழுத்துத் தேர்வுகள் ஏதும் இல்லை.
இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 31.07.2026 ஆகும்.