undefined

10வது தேர்ச்சியடைந்தவர்கள் 1,483 கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

 

தமிழகம் முழு​வதும் காலி​யாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என்று ஊரக வளர்ச்​சித் துறை அறி​வித்​துள்ளது.

இது தொடர்​பாக தமிழக ஊரக வளர்ச்​சி, உள்​ளாட்​சித் துறை ஆணை​யர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்பில், “மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலர் பதவி​யில் காலி பணி​யிடங்​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. அனைத்து மாவட்​டங்​களை​யும் சேர்த்து மொத்த காலி இடங்​கள் 1,483 ஆகும். இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்​திருக்க வேண்​டும்.

வயது வரம்பு பொதுப் பிரி​வினருக்கு 18 வயது முதல் 32 வயது வரை. பிசி, பிசி-​முஸ்​லிம், எம்​பிசி வகுப்​பினருக்கு வயது வரம்பு 34, எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 37 ஆக நிர்​ணயம் செய்​யப்​பட்​டுள்​ளது. மாற்​றுத் திற​னாளி​களுக்கு 10 ஆண்டு தளர்வு அளிக்​கப்​படும்.

விண்​ணப்​பக் கட்​ட​ணம் ரூ.100. எஸ்​சி, எஸ்டி வகுப்​பினர், மாற்​றுத் திற​னாளி​களுக்கு ரூ.50. உரிய வயது, கல்​வித் தகுதி உடைய​வர்​கள் www.tnrd.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக நவம்பர் 9ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும். மாவட்ட வாரி​யாக காலியிடவிவரம் இணை​யதளத்​தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?