ஓய்வு பெற்ற கேப்டன் மனைவி படுகொலை....  வீட்டில் வேலை செய்தவர்களே செய்த கொடூரம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ஓய்வுபெற்ற கேப்டனின் மனைவி அவரது வீட்டிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுபது வயதான அந்தப் பெண்ணை வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் உடலை மொட்டை மாடியில் மறைப்பதற்கும் அவர்கள் முயன்றுள்ளது விசாரணையில் அம்பலமானது.

पंचकूला का विश्वासघात: जिसने खाना खिलाया, उसी ने जान ले ली😔

ये घटना आपको सोचने पर मजबूर कर देगी।

हरियाणा के पंचकूला में एक आलीशान बंगले के अंदर रिश्तों का कत्ल हुआ। 70 साल की रिटायर्ड कैप्टन की पत्नी की घर में ही हत्या कर दी गई।

पुलिस जांच में खुलासा हुआ कि इस वारदात के पीछे… pic.twitter.com/4V4VtIthJQ

— Sachin Verma🐦 (@itSachinverma) August 9, 2026

பஞ்ச்குலாவில் உள்ள சொகுசு பங்களாவில் ஓய்வுபெற்ற கேப்டனும் அவரது மனைவியும் வசித்து வந்த நிலையில் அங்குப் பணியாற்றிய பணிப்பெண், அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். வீட்டில் பணியாற்றியவர்கள் என்பதால் அவர்கள் மீது குடும்பத்தினர் முழுமையான நம்பிக்கை வைத்திருந்த நிலையில் அந்த நம்பிக்கையை அவர்கள் மோசமாகச் சிதைத்துள்ளனர். கொலை நடந்த பிறகு அனைத்துத் தடயங்களையும் மறைக்கும் நோக்கில் மூவரும் சேர்ந்து பெண்ணின் உடலை வீட்டின் மொட்டை மாடிக்குத் தூக்கிச் சென்று மறைக்க முயன்றுள்ளனர்.

குற்றத்தை மறைக்க முயன்றாலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவின் காட்சிகள் அவர்களுக்கு எதிரான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. மூன்று பேரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளும் கேமராவில் பதிவாகியிருந்ததை வைத்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமான விசாரணையை நடத்தி வருகின்றனர்.