அப்பளமாய் நொறுங்கிய கார்... ஜீப் மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
Sep 16, 2026, 09:43 IST
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று டிவைடரை உடைத்துக் கொண்டு எதிரே வந்த கார் மீது மோதிய பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிபாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று திடீரெனச் சாலையின் நடுவே இருந்த டிவைடரை உடைத்துக் கொண்டு தாவிச் சென்று, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் காரில் பயணித்த கார்த்திக்குமார் (35), செல்வராஜ் (60), காந்திமதி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் காரில் பயணித்த மேலும் 3 பேரும், ஜீப்பை ஓட்டி வந்த கிசான் (19) என்பவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.