கார் பந்தயத்தின் போது தீப்பிடித்த கார்: சக வீரரின் துணிச்சலால் உயிர் தப்பிய ஓட்டுநர்
சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் வீரர் ஒருவர் தப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் ஜிடி சாம்பியன்ஷிப் ரேஸ் என்ற பெயரில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பெர்ராரி நிறுவனம் சார்பில் ஒல்லி மில்ராய் கலந்து கொண்ட நிலையில், சில கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
அப்போது மில்ராய் ஓட்டிய பெர்ராரி கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. மில்ராயால் காரில் இருந்து வெளியேற முடியாத இக்கட்டான சூழலில், இதைக் கவனித்த நெதர்லாந்தைச் சேர்ந்த லோக் ஹார்டோக் தனது காரை நிறுத்திவிட்டு ஓடிவந்துள்ளார். காரின் பின்பக்கமாக இருந்த சில பாகங்களைக் கழற்றி மில்ராயை அவர் வெளியே இழுத்து வந்து காப்பாற்றியுள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்துச் சக வீரரைக் காப்பாற்றிய லோக் ஹார்டோக்கின் இந்தத் துணிச்சலான செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த விபத்து மற்றும் மீட்பு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ollie Millroy delivers an emotional message to thank Loek Hartog for saving his life yesterday in Shanghai, China.
— MV33Racing🏎 (@MV33Racing) September 6, 2026
"I am still alive tonight, entirely thanks to one man; Loek Hartog stopped instantly with no flag marshalls or fire crews in sight, and risked his own life to get… pic.twitter.com/tWACBXQcXO