லாரி மீது கார் மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 

மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து ஜல்னா நகர் நோக்கிச் சென்ற கார், அதிவேகமாகச் சென்று லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து ஜல்னா நகர் நோக்கி ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்தக் காரில் பிரதீக் ராம்கிஷன், அவரது மனைவி ஸ்ரேயா மற்றும் அவர்களது 3 வயது குழந்தை ஆகியோர் பயணித்தனர்.

சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் வெப்ருல் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த பிரதீக் ராம்கிஷன், அவரது மனைவி ஸ்ரேயா மற்றும் 3 வயதுக் குழந்தை ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.