வெடித்து சிதறிய சரக்கு விமானம்... 3 பேர் பலி, 11 பேர் காயம்!
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS 2976 என்ற மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரக விமானமே விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர் என கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் உறுதி செய்துள்ளார். விபத்துக்குப் பிறகு லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகிலுள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!