நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து! 4,000 கார்கள் எரிந்து நாசம்!

 

ஜெர்மனியில் இருந்து வட அமெரிக்காவிற்கு சரக்கு கப்பல் ஒன்று புதிய வாகனங்களை ஏற்றிக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல்  வழியாக சென்று கொண்டிருந்தது. 
இந்த கப்பல் 650 அடி நீளமுள்ளது. திடீரென கடலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. புதன்கிழமை போர்த்துகீசிய கடற்படையால் வெளியேற்றப்பட்டுள்ளது என அசோசியேட்டட் பிரஸ்  பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கப்பல் தற்போது  போர்ச்சுகல் கடற்கரையில் தீப்பிடித்து மிதந்து வருகிறது. இதில் பணிபுரிந்த  22 பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் குழுமத்தின் 4,000 வாகனங்களை இந்தக் கப்பல் வட அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றது  என்பது குறிப்பிடத்தக்க்து. இதனை வாகன உற்பத்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த கப்பல் தீப்பிடித்ததற்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். இது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்த கப்பலில் கொண்டு செல்லப்பட்ட  குறிப்பிட்ட பிராண்டுகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் Volkswagen குழுமம் Volkswagen அமெரிக்காவில்  Porsche, Audi, Lamborghini, Bentley மற்றும் Bugatti வாகனங்களை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில்  "பல" போர்ஷே கார்கள் உள்ளன என செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. தீப்பிடித்து எரியும் கப்பலிலிருந்து எதையாவது மீட்கவும் மீட்பு குழு போராடி வருகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா பரவல் விலை உயர்வு காரணமாக ஆட்டோமொபைல் துறையில் அனைத்து வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டீலர் லாட்களில் புதிய சரக்கு ஸ்டாக் இல்லாததால், புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து  வருகின்றன.இந்த விலை உயர்வு ஒரு போதும் கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு திரும்பாது எனவும் உற்பத்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.