உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு... இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?
நடிகை த்ரிஷா குறித்துப் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உட்பட மொத்தம் 9 சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மீது பிஎன்எஸ் 79 (பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவித்தல்), பிஎன்எஸ் 196 (குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல்), பிஎன்எஸ் 351 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 (மின்சார சாதனங்கள் மூலம் ஆபாச/அவதூறு தகவல்களைப் பரப்புதல்) உள்ளிட்ட 9 பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அதிகபட்சத் தண்டனைகள் தனித்தனியாக விதிக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்புகள் இதில் அடங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை அவசரமாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினை சிறைக் காவலில் அடைக்கக் கூடாது என்றும், இன்றைய இரவுக்குள் அவருக்குக் காவல் நிலைய ஜாமீன் வழங்கி விடுவிக்க வேண்டும் என்றும் அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.