உஷார்.. பாதுகாப்பற்றது, தரமற்றது.. நெஸ்லே நிறுவனத்தின் 'லோ ஃபேட் டெய்ரி வைட்னர்' தயாரிப்புக்குத் தடை - FSSAI நடவடிக்கை!
Oct 3, 2026, 19:50 IST
பிரபல பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேவின் 'லோ ஃபேட் டெய்ரி வைட்னர்' மனித பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வகப் பரிசோதனையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற லலித் ஹோட்டலில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள் மாதிரிகளை FSSAI அதிகாரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இந்த ஆய்வின் முடிவிலேயே நெஸ்லே நிறுவனத்தின் இந்த டெய்ரி வைட்னர் தரமற்றது மற்றும் மக்களின் உடல்நலத்திற்குப் பாதுகாப்பற்றது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தயாரிப்பின் விற்பனைக்கு உடனடித் தடை விதித்து FSSAI உத்தரவிட்டுள்ளது.