காவிரி துலா உற்சவம்... பரிமளரெங்கநாதர் திருக்கல்யாண வைபவம் விமரிசை!
மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான பரிமளரெங்கநாதர் கோயிலில், காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
கொடியேற்றம் மற்றும் திருவிழா: கடந்த நவம்பர் 8-ம் தேதி கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் திருநாளை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகளான சுகந்தவனநாதர் பெருமாள் மற்றும் சுகந்தவனநாயகி தாயாருக்குச் சிறப்புத் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வையொட்டி மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், திருமாங்கல்யதாரணம், மகா தீபாராதனை மற்றும் பாரம்பரிய நலுங்கு நிகழ்ச்சிகள் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே நடைபெற்றன.
இந்தத் திருக்கல்யாணக் காட்சியைத் தரிசிக்க மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.