தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் தமிழகத்திற்குச் சாதகமான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுட்டுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் காவிரி படுகை அணைகளின் நீர் இருப்பு மற்றும் இரு மாநிலங்களின் விவசாயத் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டின் அவசியமான தேவைகளைக் கருத்தில்கொண்டு, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஒழுங்காற்றுக்குழுவின் இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாகத் தன் அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக விவசாயிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.