கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு!

 

கர்நாடக மாநிலத்திலுள்ள முக்கிய அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 105.04 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 563 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,929 கனஅடியாக உள்ளது.

கபினி அணையின் நீர்மட்டம் 2,269.21 அடியாகவும், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,039 கனஅடியாகவும் பதிவாகியுள்ளது. கபினியிலிருந்து காவிரியில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,849 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது அதிகரிக்கப்பட்டு மொத்தம் வினாடிக்கு 3,429 கனஅடி நீர் தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது.