நீட் வினாத்தாள் கசிவு - NTA துறைசார் வல்லுநர்கள் 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

 

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது வினாத்தாள்களைக் கசியவிட்ட விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை நியமித்த 3 துறைசார் வல்லுநர்களுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்து மத்திய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

NTA அமைப்பால் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் சரிபார்ப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட துறைசார் வல்லுநர்கள் சிலர், பெரும்தொகையைப் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு வினாக்களைக் கசியவிட்டுள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப்பத்திரிகையில் தாவரவியல் மனிஷா குருநாத் மந்தாரே, வேதியியல் பிரகலாத் வித்தல்ராவ் குல்கர்னி, இயற்பியல் மனிஷா சஞ்சய் ஹவால்தார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பண ஆசைக்காக மாணவர்கள் மற்றும் பெற்றொர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய இந்த 3 துறைசார் வல்லுநர்கள் மீதும் சிபிஐ அதிகாரப்பூர்வமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள இடைத்தரகர்கள் குறித்தும் சிபிஐ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.