சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு 2-வது கட்ட பொதுத்தேர்வு மே 15-ல் தொடக்கம் - முழு அட்டவணை வெளியீடு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2026-ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ள 'ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள்' திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.
முதலாவது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இரண்டாவது தேர்வு மதிப்பெண்ணை உயர்த்த விரும்பும் மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படுகிறது (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்). ஒரு மாணவர் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை எழுதலாம். முதல் தேர்விற்கும், இரண்டாம் தேர்விற்கும் இடையே எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதுவே இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும்.
| தேதி |
பாடம் (Subject) |
| மே 15 |
கணிதம் (Mathematics Standard & Basic) |
| மே 16 |
ஆங்கிலம் (English Language & Literature) |
| மே 18 |
அறிவியல் (Science) |
| மே 19 |
மொழிகள், இல்ல அறிவியல், இசை, சில்லறை வர்த்தகம், சுற்றுலா |
| மே 20 |
ஓவியம், சமஸ்கிருதம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு |
| மே 21 |
சமூக அறிவியல் (Social Science) |
மே 15-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை குறுகிய கால இடைவெளியில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படுகின்றன. மாணவர்கள் ஒரே ஆண்டில் தங்கள் மதிப்பெண்ணைச் சீரமைத்துக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.