சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை... 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த மொழிகளைத் தொடரலாம் - உச்சநீதிமன்றம் தெளிவு!
சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்துள்ள இரண்டு அல்லது மூன்று மொழிகளையே இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து படிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வியாண்டின் இடையில் மொழிகளை மாற்றும்படி மாணவர்களைப் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஏற்கெனவே தேர்வு செய்துள்ள இரண்டு அல்லது மூன்று மொழிகளைத் தொடர்ந்து கற்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டின் இடையில் புதிய மொழிகளைத் தேர்வு செய்யும்படியோ, ஏற்கெனவே உள்ள மொழிகளை மாற்றுமாறோ மாணவர்களைப் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இரண்டு மொழிகள் மட்டும் பயின்று வரும் மாணவர்கள், நடப்புக் கல்வியாண்டில் அதே இரண்டு மொழிகளையே தொடர்ந்து படிக்கலாம். இரண்டு மொழிகள் படிக்கும் மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் மூன்றாவது மொழியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.