அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவினர் சோதனை - பள்ளி அங்கீகார முறைகேடு புகார் எதிரொலி!
Updated: Sep 16, 2026, 09:53 IST
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில், மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில், 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை 7 மணி முதல் சோதனையைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியில் அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, தனியார் பள்ளி அங்கீகார வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தற்போது இந்த விசாரணை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.