மாதம் ரூ.44,900 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

 

மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் சீனியர் பிரைவேட் செக்ரட்டரி, பிரைவேட் செக்ரட்டரி பணிகள்  42 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,51,100 வரை (7-வது ஊதியக் குழுவின் கீழ் Level 7 & Level 8)

எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் itat.gov.in/recruitments என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.08.2026