9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! நவம்பர் 30 கடைசி நாள்

 

 

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), சீர்மரபினர் (DNT) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (scholarships.gov.in) பட்டியலிடப்பட்டுள்ள 100 சதவீத தேர்ச்சி பெற்ற சிறந்த செயல்பாட்டுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000-ம், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையும் உதவித்தொகை வழங்கப்படும். இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதியதாக விண்ணப்பிக்கும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆதார், செல்போன் விவரங்களைப் பயன்படுத்தி தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் OTR எண்ணைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க டிசம்பர்