பாகிஸ்தான் திரைப்படங்கள், தொடர்களை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸிற்கு மத்திய அரசு தடை!

 

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் உள்ளிட்ட எந்தவொரு படைப்புகளையும் இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 'ஜோ பச்சே ஹெய்ன் சங் சமைட் லோ' என்ற இணையத் தொடர் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பவாத் கான், மஹிரா கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் தொடரை இந்தியாவில் வெளியிடக் கூடாது என அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் மற்றும் மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர் சம்மேளனம் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிறப்பிக்கப்பட்ட தடையையும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த உறுதிமொழியையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.