8 அந்தமான் தீவுகளுக்கு கடலுக்கடியில் அதிவேக இணையம்: மத்திய அரசின் 'பானி' திட்டம்!

 

திகிலிபூர், மாயாபந்தர், ஷாஹீத் தீவு, சௌரா, தெரசா, கட்சல், நான்கோவ்ரி மற்றும் லிட்டில் நிக்கோபார் ஆகிய 8 அந்தமான்-நிக்கோபார் தீவுகளைக் கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வட வலையமைப்பு மூலம் இணைக்கும் 'பானி' திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஒடிசாவின் பூரியில் இருந்து தொடங்கும் இந்தத் திட்டம், ஏற்கனவே உள்ள சென்னை–அந்தமான் கடலடி கேபிள் வழித்தடத்திற்கு மாற்று மற்றும் கூடுதல் பாதுகாப்பான பாதையாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்கள் அல்லது அவசரகாலங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல் தடுக்கவும், தொலைதூரத் தீவுகளில் இணைய மற்றும் மொபைல் சேவைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 87 கிராமங்களுக்கு 4ஜி சேவை விரிவாக்கம் மற்றும் பாரத்நெட் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடி ஃபைபர் இணைப்பு வழங்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் டிஜிட்டல் சேவைகள், கல்வி மற்றும் அவசரகாலத் தகவல் தொடர்பு பெரிதும் வலுப்படும்