undefined

 கராத்தே கிட்’ பட நடிகர் சாட் மெக்வீன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
 

‘கராத்தே கிட்’ திரைப்பட நடிகர் சாட் மெக்வீன் காலமானார். அவருக்கு வயது 63.கராத்தே கிட் படத்தில் பிரபல டச்சுக்காரராக நடித்திருந்தவர் சாட் மெக்வீன். சாட் மெக்வீன், நேற்று தனது பண்ணை வீட்டில், உறுப்பு செயலிழப்பின் காரணமாக உயிரிழந்ததாக அவரது நீண்டகால நண்பரும், வழக்கறிஞருமான ஆர்தர் பேரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாட்  காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த காயம், அவரது உடல் உறுப்பு செயலிழப்பு வரையில் கொண்டு சென்றது. சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் நேற்று காலமானார். சாட் உயிரிழக்கையில், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் உடனிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகர் ஸ்டீவ் மெக்வீன்சாட்டின் ஒரே மகன், சாட். கடந்த 1984ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற “தி கராத்தே கிட்” படத்தில் டச்சுக்காரராக நடித்து ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தார். அதன் பின்னர்  1986ல் தொடர்ச்சியாக “தி கராத்தே கிட் II” படத்திலும் மீண்டும் நடித்திருந்தார்.1993ல் “ஃபயர்பவர்” திரைப்படத்தில் அவரது முக்கிய கதாபாத்திரம் மீண்டும் ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.