“பச்சோந்தி ஷாஜகானே மன்னிப்புக் கேள்!” - திமுகவினர் போஸ்டரால் பாபநாசத்தில் பரபரப்பு!

 

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ஷாஜகானைக் கடுமையாக விமர்சித்துத் தமிழகத்தின் பாபநாசம் பகுதியில் திமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் பேசிய புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான், தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக ஆட்சியைப் பாராட்டிப் பேசியிருந்தார். மேலும், "முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இல்லாமல் துடைத்து எறியப்படும்" என்று மிகவும் அதிரடியாகவும் காரசாரமாகவும் விமர்சித்திருந்தார்.

அமைச்சர் ஷாஜகானின் இந்த ஆவேசப் பேச்சு, பல ஆண்டுகளாகக் கூட்டணியில் இருக்கும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமைச்சரின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவினர் பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில், "கடந்த காலங்களில் திமுகவின் தயவாலும், அதன் வாக்கு வங்கியாலும் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு,  நன்றியுணர்வின்றி திமுகவையே விமர்சனம் செய்யும் பச்சோந்தி ஷாஜகானே பொதுவெளியில் மன்னிப்புக் கேள்!"

ஏற்கனவே முரசொலி நாளிதழ் வெளியிட்ட தலையங்கம், அதற்குப் பதிலடியாகக் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் வெளியிட்ட கூட்டறிக்கை, புதுச்சேரியில் காங்கிரஸ் - தவெக இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி உடன்பாடு என அடுத்தடுத்துப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் அமைச்சர் ஷாஜகானை குறிவைத்துத் தமிழகத்தில் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது இரு கட்சிகளுக்கும் இடையே அடிமட்டத் தொண்டர்கள் அளவிலும் மோதல் முற்ற முற்றத் தொடங்கியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.