செக் பண்ணிக்கோங்க!! இவங்களுக்கு எல்லாம் விண்ணப்ப பதிவு கட்டணம் கிடையாது!! 

 

தமிழகம் முழுவதும்இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். SC / ST மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று ப்ளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதனை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும்  கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள்  செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 143 கலை, அறிவியல் கல்லூரிகள் அரசு நடத்துபவை. இதில், 92000க்கும்  மேற்பட்ட இடங்கள் உள்ளன.தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று மே 8ம் தேதி திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது.  அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  இன்று முதல் மே 19ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பதிவு செய்தவர்களுக்கு மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்  அரசு கலைக்கல்லூரிகளில் சேர முதல்கட்ட பொதுகலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9ம் தேதி வரை நடபெறும் எனவும்  உயர்கல்வி  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.