நாளை 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு... 85 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!
Nov 24, 2026, 16:10 IST
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (நவ.25) சென்னையில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற்ற முதல் மாநாட்டில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்திருந்தது.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அடுத்த பிளான் ...தவெக அரசின் மாஸ்டர் பிளான் என்ன ? | cmvijay | tvk #cmvijay #tvk #MadhimugamTV https://t.co/dSQjpRnbTV
— Madhimugam TV (@madhimugam_tv) November 20, 2026
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 2-வது மாநாட்டில் சுமார் 85 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாடு மூலம் புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.