டிச.13-ல் சென்னையில் 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

 

 

அரசாணை 319-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் டிசம்பர் 13-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பு ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடின்றி பர்மிட் வழங்கும் இந்த அரசாணையைப் பயன்படுத்தித் தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை இயக்கி வருவதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முறையான ஆவணங்களின்றி வடமாநில ஓட்டுநர்களைப் பணியமர்த்துவதால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.