இன்று இரவு முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.. முழு பட்டியல்!
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட இரவு நேர மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்–விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரெயில் நிலையத்தில் நாளை செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இரவு நேர ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதுதவிர, தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், செப்டம்பர் 27-ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளது.எனவே, இந்த நாட்களில் இரவு நேரத்தில் சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள், புறப்படும் முன்பு ரெயில் சேவை குறித்த சமீபத்திய தகவல்களை சரிபார்த்து பயணத்தை திட்டமிடுவது அவசியம்.கிண்டி ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை, மேற்கண்ட ரெயில் சேவைகளில் இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.