டேட்டிங் செயலி மூலம் வலைவீச்சு: இளைஞரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை பணம் பறித்த திருநங்கை!

 

 

சென்னை தண்டையார்பேட்டையில் டேட்டிங் செயலி மூலம் பழகிய இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்ததாக திருநங்கை ஹாசினி (26) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேட்டிங் செயலி மூலம் அந்த இளைஞருடன் ஹாசினி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இளைஞரை ஆடையின்றி வீடியோ எடுத்ததாகத் தெரிகிறது.

பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, இளைஞரிடம் இருந்து ரூ.8,000 ரொக்கப் பணம் மற்றும் 6 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹாசினியின் செயல்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.