புதிய அமைச்சரவையில் சென்னைக்கு மட்டும் 7 அமைச்சர்கள் தேர்வு!

 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவையில், தலைநகர் சென்னை மாவட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமைச்சரவையில் சென்னையில் இருந்து மட்டுமே முதலமைச்சர் உட்பட மொத்தம் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டப் பதவியேற்பு விழாவின் போது, சென்னையில் இருந்து 5 முக்கியப் புள்ளிகள் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தனர். முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜுனா (அமைச்சர்), என்.ஆனந்த் (அமைச்சர்), வெங்கடராமன் (அமைச்சர்), ராஜ்மோகன் (அமைச்சர்). இந்நிலையில் இன்றைய விரிவாக்கத்தில் மேலும் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற உள்ள 23 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில், சென்னையில் இருந்து என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.. ஆர்.குமார் – வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. என மேலும் இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரின் சேர்க்கையையும் சேர்த்து, தவெக அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, குடிநீர் விநியோகம் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முக்கியப் பணிகளை அதிவேகமாக முன்னெடுக்கவும், சென்னை மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கைத் தக்கவைக்கவும் சென்னை மாவட்டத்திற்கு இந்த அசுர பலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.