மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம்.. நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.26) சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,080க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.80 குறைந்து ரூ.1,12,000க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை, கடந்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது. தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.