மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு இன்று ரூ.200 அதிகரிப்பு!

 

 

சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம் சரிவைச் சந்தித்த நிலையில், இந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 3) ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் மேலும் ரூ.25 உயர்ந்து ரூ.12,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.