5-வது நாளாக தொடர்  சரிவில் தங்கம்...  வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி!  

 

 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5-வது நாளாக சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது.நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 13) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.960 சரிந்து ரூ.1,01,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4,480 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம், வெள்ளி என இரண்டின் விலையும் ஒரே நாளில் குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.