தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 சரிவு! 2 வாரங்களில் ரூ.11,240 குறைந்தது
Nov 19, 2026, 09:53 IST
சென்னையில் தங்கம் விலை இன்று (நவ.19) அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 சரிந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆக உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.11,240 வரை சரிந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 சரிந்து ரூ.180-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது