மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; சவரன் ரூ.1,02,600 ஆக அதிகரிப்பு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.12,825 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதே நேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றித் தொடர்வது குறிப்பிடத்தக்கது.