தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைச் சூழல் காரணமாக, இன்று (செப்.30) மாநிலம் முழுவதும் உள்ள 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.