பேட்மிண்டன் விளையாடிய 23 வயது காவல் ஆணையரின் மகன்   திடீர் மரணம்... தந்தையின் கண்முன்னே சோகம்...!

 

சென்னை போரூரில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூரைச் சேர்ந்தவர் கவுதமன். இவரது மகன் சிவ சூர்யா, 23. தந்தையும் மகனும் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூர்யா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கவுதமன் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக சூர்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவர்களின் பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக சூர்யா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையின் கண்முன்னே மகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.23 வயது இளைஞர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே எதிர்பாராத வகையில் உயிரிழந்த சம்பவம் போரூர் பகுதியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.