சென்னையில் சோகம்! கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை உயிரிழப்பு..!
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 1 வயது குழந்தை ப்ரித்திவ், கடுமையான காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களாக குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் திடீர் மரணம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உயிரிழப்புக்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தையின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே குழந்தையின் மரணத்திற்கான மருத்துவ காரணம் குறித்து தெளிவான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.