பட்டப்பகலில் பயங்கரம்! அடையாறில் ரவுடி மைத்ரேயன் வெட்டிக் கொலை!

 

 

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில், மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே இன்று (அக். 27) இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், மைத்ரேயனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.