உஷார்... சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே  மின்சார ரயில்கள் ரத்து!

 

தலைநகர் சென்னையின் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்துச் சேவையாக விளங்கும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில், இன்று ஜூன் 23 அன்று இரவு நேரத்தில் சில தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களுக்கு இடையே இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 ஆகிய குறிப்பிட்ட நேரங்களில் வழக்கம்போல் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தற்பொழுது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் கூடுவாஞ்சேரி மற்றும் சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே இரவு 9.40 மற்றும் 10.15 மணிக்கு இயக்கப்பட வேண்டிய ரயில்கள் தங்களது வழக்கமான இலக்கை அடையாமல் தாம்பரம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ரயில் சேவை ரத்து மற்றும் தற்காலிக மாற்றங்களின் காரணமாக இரவு நேரத்தில் பயணிக்கும் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தற்காலிக ரயில் சேவை ரத்து விபரங்களை நுகர்வோர் பொதுமக்கள் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தங்களது அத்தியாவசியப் பயணங்களுக்கு மாற்றுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.