சிக்கன், மட்டன் விலை உயர்வு - காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதிக்க வேண்டும் - CPI எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கோரிக்கை!

 

சட்டப்பேரவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், கோழி மற்றும் ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைக் சுட்டிக்காட்டி, காட்டுப்பன்றிகளைச் சுட அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சிக்கன் விலை ரூ.250-ஆகவும், மட்டன் விலை ரூ.600-ஆகவும் உயர்ந்துள்ளதை அவர் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

மத்திய அரசைப் போலவே மாநில அரசும் காட்டுப்பன்றிகளைப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காட்டுப்பன்றிகளைச் சுட மட்டும் அனுமதி வழங்கினால், எஞ்சியவற்றை விவசாயிகளே பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.